தேவகோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி உற்சவம் ஆகஸ்ட் 15ல் தொடங்கியது. தினமும் அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. ஆகஸ்ட் 17ல் திருவிளக்கு பூஜை நடந்தது. சிலம்பணி ஐயப்பன் கோவிலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. 1000க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.