கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி மேரி ஜூலியானா (), பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை, சிகரெட் வாங்குவதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், மேரி ஜூலியானாவை சுத்தியால் தாக்கி, அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர்.