திருப்பத்தூரில் 1986 முதல் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய தீயணைப்பு நிலையம்,தற்போது குறிஞ்சி நகரில் 24 ஏர் பரப்பில்,2.17 கோடி செலவில் புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்டது.முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொளி வாயிலாக இதனைத் திறந்து வைத்தார்.அமைச்சர் பெரியகருப்பனும்,ஆட்சியர் பொற்கொடியும் குத்துவிளக்கேற்றி மகிழ்ந்தனர். ஆட்சியர்,இந்த புதிய நிலையத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் என நம்புவதாகக் கூற அமைச்சர் பெரியகருப்பன் எல்லா வசதிகளும் மிகச்சிறப்பாக உள்ளதாக உறுதியளித்தார்.