சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில்களில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆடி செவ்வாயை முன்னிட்டு பக்தர்கள் கோழிகள், சேவல்கள்,கிடாய்கள் பலியிட்டும் நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். பெண்கள் கோவில் முன்பு வெண் பொங்கல்,சர்க்கரை பொங்கல் வைத்தும்,நோய்கள் தீரவேண்டி வயிற்று மாவிளக்கு தீபம் ஏற்றியும்,திருமண தடை நீங்கவும்,குழந்தை பாக்கியம் வேண்டியும் மண்சுட்டியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.