ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரத்தி எடுத்தும் பூக்களைத் தூவியும் வரவேற்ப்பளித்தனர்.