திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அனைவருக்கும் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைக்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத்தொகை ஊதியம் உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.