கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா சார்பில் இந்து எழுச்சி ஊர்வலம் மற்றும் சமுத்திர அர்ப்பண விழா நடைபெற்றது இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் எடுத்துவரப்பட்டு கோவில்பட்டி நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது தொடர்ந்து வேம்பார் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.