காரைக்குடியில், அருணா நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மூன்றாவது மனைவி பவித்ரா (26), செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது இரண்டாவது மனைவி இலக்கியாவின் புகாரால், மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் வீடு திரும்பிய பவித்ரா, இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இலக்கியா உள்ளிட்ட சிலரை தற்கொலைக்கு காரணமாக குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.