வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டியில் தனியார் நற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்குமார் என்பவர் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். இவர் வேலை முடிந்து விடுதியில் தங்கியிருக்கும் நேரத்தில் ஆன்லைன் டிரேடிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி வந்த சம்பள பணம் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துவிட்டார். இதனால் தனது குடும்பத்திற்கு மாதந்தோறும் அனுப்பும் பணத்தை அனுப்ப முடியவில்லை என்ற வேதனையில் இளைஞர் விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை.