ஓசூர் அருகே கண்ணாடி விரியன் விஷப்பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு : கிராம மக்கள் சோகம் ஓசூர் அருகே உள்ள கிறிஸ்து பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிறிஸ்துராஜ், இவரது மனைவி லூயிஸ் விண்ணரசி (37) இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த திங்கள்கிழமை லூயிஸ் விண்ணரசி, கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.