ஒட்டன்சத்திரம் தாலுகா தேவத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் 8 மாதங்களுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தனர்.