கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் கிடையாது இருப்பினும் சிலர் சிறப்பு தரிசனம் என கட்டணம் வசூல் செய்வதாக புகார் இருந்தது இந்த நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக சிறப்பு காவலர் செந்தில்குமார் பக்தர்களும் சிறப்பு தரிசனம் எனக் கூறி பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இணை ஆணையர் ஊழியர் செந்தில்குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்