தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில், மாநகரை இரண்டாக பிரிக்கும் வகையில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த ஓடை மாநகரில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கான வடிகாலாக விளங்கி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி இரண்டாம் கேட் பக்கிள் ஓடையில், ஒருவர் தவறி விழுந்து கிடைப்பதாக மாவட்ட தீயணைப்பு ஆலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.