திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையில் ஈடுபட நத்தம் வருகை தந்த போது கணவாய்பட்டி அருகே புளி விவசாயிகள் தங்களது கோரிக்கை குறித்து அவரிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தனர். சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னாள் முதல்வரை இழிவு படுத்தும் விதமாகவும், புளி விவசாயிகளை கொச்சைப் படுத்தும் விதமாகவும் பேசியது கண்டிக்கத்தக்கது.