இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்து 200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். சுற்றுலா, தனியார் வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொது அமைதியை குலைக்கும் வகையில் பிளக்ஸ் வைக்க கூடாது.