ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட குட்டகந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா லஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார். மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.