கேரளாவை சேர்ந்தவர் அனுப். அந்த பகுதியில் தனியார் பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் நேற்று நெல்லை மாவட்டத்திற்கு பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரியை ஒட்டி வந்தார் இன்று காலை பால் இறக்கிவிட்டு மீண்டும் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார் செண்பகராமன் புதூர் மரப்பாலம் பகுதியில் சென்ற போது திடீரென டேங்கர் லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் அனுப் உயிரிழந்தார் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்