வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த புல்லூர் கிராமத்தை சேர்ந்த அனுமுத்து என்பவரை நேற்று வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம் மற்றும் வருவாய் துறையினர் பிடித்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கிராமநிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமுத்துவை சிறையில் அடைத்தனர்.