ஆம்பூர் அடுத்த சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் சிட்டிபாபு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அதிக அளவு தோல்கழிவுகள் கொட்டி வைத்திருந்த நிலையில், அந்த தோல்கழிவுகளுக்கு இன்று காலை மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவிய நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.