திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனுமதியின்றி மாநில ஒருங்கிணைப்பாளர் கோகுல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்.கட்சியின் மாநில நிர்வாகி ஏழுமலை உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.