ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் செங்கல் சூளைக்கு விறகுலோடு ஏற்றி சென்ற டிராக்டர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது இன்று இரவு மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.