கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை உள்ளது இவற்றின் இடையே கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது இதனை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு இயக்கி வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 2,20,200 பேர் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர் இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.