பழனியில் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட யோகாசன போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் இணைந்து போட்டிகளை நடத்தினர். திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் யோகா போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.