கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராம தலித் மக்கள் மீது சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பாக முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினை தாலுக்கா அலுவலகத்தில் வழங்கினர்