பிஜேபியின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று திருநெல்வேலி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, திருநெல்வேலி மாநகர் முழுவதும் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் இன்று காலை 8 மணி அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, “தமிழரை ஆள விடமாட்டோம்” என்று அமித்ஷா பேசியதாகக் கூறப்படும் கருத்தை நினைவூட்டும் வகையில், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.