அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி, விஸ்வேஷ் பா. சாஸ்திரி வருடாந்திர ஆய்வில் ஈடுபட்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டார். மேலும் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்தும், வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரவும் ஆலோசனை வழங்கினார்.