கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள் எழுந்தன. தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அமைக்கப்பட்டிருந்த ராட்சத பாறைகள் மீது மோதி வழக்கத்துக்கு மாறாக அலைகள் மேலே எழுந்தன. இதனால், சாலையில் கடல் அரிப்பு ஏற்பட்டு,சுமார் 10 அடிக்கும் மேல் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள்,உள்ளூர் ஆட்டோ மற்றும் மீன் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும்.