சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நடராஜபுரத்தில் உள்ள இராமாயி நினைவு தொடக்கப்பள்ளியில் 36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 புதிய வகுப்பறை கட்டிடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமரன், பள்ளி செயலர் சண்முகம், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.