திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி அசோக் நகர் பகுதியில் இன்று தமிழக அரசின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் தாசில்தார் நவநீதம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.