ஏரல் அருகே பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகள் விஜித்ரா மற்றும் மகன் பொன்செல்வன் இவர்கள் இருவரும் நேற்று ஏரல் பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது ஒரு பையில் 6 தங்க மோதிரங்கள் இருப்பதை அறிந்தனர். உடனடியாக அவர்கள் இவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அக்கா, தம்பி என இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும் ஏழ்மையிலும் நேர்மையாக செயல்பட்டனர் என வாழ்த்து தெரிவித்தனர்.