திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (30).அவரது மனைவி ஈஸ்வரி(27). இவர்களுக்கு சுபாஷினி(7) என்கிற மகளும் ஜெய் கிரிஷ் என்ற ஒன்றை வயது ஆண் குழந்தையும் இருந்து வருகிறது,இந்நிலையில் இன்று காலை மகள் சுபாஷினியை பள்ளிக்கு அனுப்புவதற்காக தாய் ஈஸ்வரி சீருடை மாற்றி தலைவாரிக் கொண்டிருந்தார். அப்போது ஒன்றை வயது ஆண் குழந்தை வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டில் மூழ்கி பலியானது,