ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அழிஞ்சிகுப்பம் கிராமங்களுக்கிடையே சுமார் 700 மீட்டர் தொலைவில் ₹22 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, வேலூர் எம்பி கதிர்ஆனந்த் மற்றும் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் ,திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.