கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் ஆனைமலை பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மிதமான முதல் கனமழை வரை பெய்து கொண்டிருப்பதால் தற்பொழுது ஜில்லு என்ற குளிர் காத்து வீசி வருகிறது இந்நிலையில் இன்று மதியம் இரண்டு மணி அளவில் கருமேகம் சூழ்ந்து குளிர்காற்று வீசியதால் ஆனைமலை அடுத்த கோட்டூர் காவல் நிலைய வளாகத்தில் ஆண் மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது இதனைக் கண்ட காவலர்கள் உற்சாகமடைந்தனர்