கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா இவர் சிறுமுகை அருகே உள்ள சம்பரவள்ளி பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இவரது கடைக்கு வந்த இரண்டு நபர்கள் திடீரென சுஜாதா கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர் அது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்