கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யக் கோரி மதுக்கரை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான கொச்சி சாலையில் ஆறு சுங்கச்சாவடிகள் இருந்தன. இதில் மதுக்கரை தவிர மற்ற ஐந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது.