திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ-5 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நியாயவிலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து முதல் விற்பனைய துவக்கி வைத்தார்.