சிங்கம்புணரியில் தனியார் தேங்காய் பருப்பு கொள்முதல் நிலையத்தில் மாதம் 1 லட்சம் மதிப்புள்ள எண்ணெய் தேங்காய் பருப்பு மூட்டைகள் சுமார் ஒரு வருடமாக திருடு போய் உள்ளது.சந்தேகத்தின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது முன்னாள் பணியாளர் சின்னையா என்பவர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. சிசிடிவி ஆதாரங்களை வைத்து சிங்கம்புணரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்