திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாடு அடுத்த புலியூர் பகுதியில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுப்பூச்சி வளர்ச்சி மையம் மற்றும் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று பணியாளர்கள் வேலை செய்யவேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பட்டுப்பூச்சி மையம் செயல்படாமல் அங்குள்ள கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது. இந்த பட்டுப்பூச்சி மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..