சென்னை சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் பகுதியில் சுமார் 5000 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதிகள் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறி மழை காலங்களில் சேரும் சகதியும் உள்ளதால் விபத்துக்கள் நடைபெறுவதாக சிபிஎம் கட்சியினருடன் பொதுமக்கள் இணைந்து வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர் இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்