மரக்காணம் மேட்டு தெரு பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்கு பதிவு செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.