திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் டில்லிபாபு. இவரது மூன்றரை வயது பெண் குழந்தையை கடந்த 2020 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கேட்டரிங் மாஸ்டர் பிரபாகரன் பாலியல் வன்கொடுமை செய்தார், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 35 ஆயிரம் அபராதம் பதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பளித்தார்