கள்ளக்குறிச்சி நகர பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று கள்ளக்குறிச்சி மந்தைவெளியிலிருந்து கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கேரளா செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோமுகி ஆற்றில் கரைக்கப்பட்டது.