தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி மூட்டைகளை குழுவின் தலைவரும் எம்எல்ஏவுமான நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு அதன் தரங்களை ஆய்வு செய்தனர் அப்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத ரேஷன் அரிசி 1538 டன் 3 ஆண்டுகளாக கிடங்கில் வைத்து வீணாக்கிய தமிழ்நாடு நகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்