சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் பேரூராட்சியில், பாலையூர் பணிக்கர் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை மற்றும் தியேட்டர் அருகே உயர் மின் கோபுர விளக்கு ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பேரூராட்சி தலைவர் சங்கீதா செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்