கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இன்று மதியம் 12 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.