கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த தளபதி தனது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல வீட்டின் அருகே நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார். அப்போது டிஎம்சி காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தளபதியின் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளரின் நண்பர்கள் 17 வயது சிறுவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.