ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஒருமையில் விமர்சித்ததை கண்டித்தும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையில் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அனைவரும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்