குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி 20லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிமெண்ட் குறைவாக போட்டும் தரையை தோண்டாமல் அப்படியே தரமற்ற முறையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதி இளைஞர் ஒருவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் தற்போது பெய்த சாதாரண மழைக்கு கூட தாங்காமல் இடிந்து விழுந்து தரை மட்டமாக கிடைக்கும் கட்டிட சுவற்றை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.