புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்த நசீரான் என்பவர் நேற்று இரவு நேரத்தில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பும் போதும் அருகே சென்ற மர்ம நபர் ஒருவன் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்து உள்ளான். இதனால் நிலைகுலைந்த முதியவர் கீழே விழுந்துள்ளார். அவருக்கு காலில் ரத்தகாயம் ஏற்பட்ட நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலிசார் நசீரானிடம் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.