அம்பத்தூர், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷகிலா, 55. இவர், அம்பத்தூர் எம்.கே.பி., நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் பூசாரி லோகேஷ், 26, சந்தித்து குடும்ப பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்,கலசத்தை வைத்து பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீரும் என கூறி பூஜை செய்த லோகேஷ் பூஜையின் போது ஒரு கலசத்தை காண்பித்து, அதில் ஷகிலா அணிந்திருந்த நகைகளை போட கூறி 5 சவரன் நகையை லாவகமாக திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர்,